திருப்பூர்-தாராபுரம் சாலையில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் வட்டமிட்டு சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விடாமல் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீேழ விழும் நிலை உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன்பு, அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
செல்வம், திருப்பூர்.