வெள்ளகோவில் நகராட்சி 19-வது வார்டு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக முதியவர்கள் நீண்ட நேரமாக நிற்பதால் சிரமப்படுகிறார்கள். எனவே பயணிகள் அமரும் வகையில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோகேஸ்வரன், வெள்ளகோவில்.