கச்சிராயப்பாளையம் - சின்னசேலம் சாலையில் சாலையோரங்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதால் விபத்து அபாயம் சூழல் உருவாகி உள்ளது. எனவே சாலையோரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.