மருங்கூர் ஏரியில் வண்டல் மண் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அள்ளப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயமும், மக்களின் விவசாயம், குடிநீர் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விதியை மீறி மணல் அள்ளும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.