வத்தலக்குண்டு அருகே உள்ள உச்சப்பட்டியில் மருதாநதியும், மஞ்சளாறும் ஒன்று சேருகிறது. அந்த பகுதியில் குளிப்பட்டி புதிய பாலம் அருகே ஆற்றில் அமலை செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே ஆற்றில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள அமலை செடிகளை விரைந்து அகற்ற வேண்டும்.