விரிசல் விழுந்த பஸ் நிலைய மேற்கூரை

Update: 2025-09-07 15:47 GMT

ஏற்காடு பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க காத்திருக்கும் கூடம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திலிருந்து கிராம பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இங்கு காத்திருப்பார்கள். இந்நிலையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தின் மேற்கூரை விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடனே நிற்க வேண்டி உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் விரிசல் வழியாக ஒழுகுகிறது. மேலும் இந்த இடத்தில் ஒரு சிலர் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்காடு பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.

-டேவிட், ஏற்காடு.

மேலும் செய்திகள்