ஆமை வேகத்தில் நடக்கும் நூலக பணி

Update: 2025-09-07 15:30 GMT

பரமத்தியில் அரசு கருவூலம் வாரச்சந்தை கூடும் இடத்தில் பழைய நூலக கட்டிடம் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதற்கு மாற்றாக அங்கன்வாடிக்கு அருகில் புதிய நூலக கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கின. ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. தற்போது மழைக்காலம் ஆரம்பித்ததால் இந்த பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. எனவே அரசு நூலக கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அரசு பணி தேர்வுகளுக்கு படிப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோரிக்கையாகும்.

-மணிகண்டன், பரமத்தி.

மேலும் செய்திகள்