தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பையர்நத்தம் கிராமத்தில், பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இந்த பகுதி மக்களின் குடிநீர், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரி கரையின் வழியாக சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ஏரிக்கரையை சுற்றி தடுப்புச்சுவர் இல்லை. ஏரிக்கரையோரம் வாகனங்கள் செல்லும் போது எதிர்பாராதவிதமாக ஏரியில் விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த ஏரிக்கரையோரம் விபத்துகளை தவிர்க்க தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
-செழியன், பையர்நத்தம்.