கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பெங்களூரு சாலை, சென்னை சாலை, காந்தி சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்குகிறார்கள். நகராட்சி சார்பில் சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும், தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். எனவே நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம், கிருஷ்ணகிரி.