கரூர் மாவட்டம் க.பரமத்தி உப்புபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் இருந்து உப்புபாளையம் செல்லும் பிரிவு சாலை அருகே தார்சாலை ஓரத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதியில் தார்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை மேம்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரர்கள் நிழற்கூடத்தை இடித்து அகற்றிவிட்டனர். இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.