அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மாதிரி பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் சாலையோரம் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதுடன், வாகனங்களின் குறுக்கே சென்று விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சுத்துடன் வாகனத்தை இயக்கும் சூழல் உள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.