‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-09-07 11:40 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா இரும்புலிகுறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில், செவிலியர் தங்கும் விடுதியின் மேலே பெரிய ஆலமரம் ஒன்று முளைத்து உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செவிலியர் தங்கும் விடுதியின் மேலே முளைத்திருந்த ஆலமரத்தை அகற்றினர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்