கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரிக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் ரெயில் இயக்கப்படுகிறது. 2 சுற்றுலா தலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயில் காவிரி பாசன பகுதியில் உள்ள ஆன்மிக தலங்களையும், சிதம்பரம் வழியாக வருவதால் அண்ணாமலை பல்கலைக்கழக ஆயிரக்கணக்கான மாணவர்கள், பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. எனவே, பல ஆண்டுகளாக ஒரு முறை இயக்கப்படும் இந்த ரெயிலை தினசரி இயக்கினால் பல லட்சம் பயணிகள் பயனடைவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?