வடலிகாட்டுவிளையில் சாலையோரத்தில் தெருவிளக்குடன் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் இணைப்பட்டுள்ள தெருவிளக்கிற்கான சுவிட்சு பெட்டி குழந்தைகளுக்கு எட்டும் வகையில் துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் குழந்தைகள் மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் துருபிடித்து காணப்படும் சுவிட்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை சற்று உயரமான இடத்தில் பொருத்திட வேண்டும்.