துரத்தி கடிக்கும் தெரு நாய்கள்

Update: 2025-08-31 17:52 GMT

சேவூரில் ராஜவீதி, வடக்கு வீதி, ஏரிமேடு, மாரியம்மன் கோவில் வீதி, கோபி சாலை, புளியம்பட்டி சாலை, குன்னத்தூர் சாலை மற்றும் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதி கோபி, அந்தியூர், சத்தி, புளியம்பட்டி, குன்னத்தூர், அவினாசி, திருப்பூர் செல்லும் சாலைகளை இணைக்கும் பகுதியாகும். இந்த சாலைகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. மோட்டார் சைக்கிளில் வருபவர்களை தெரு நாய்கள் துரத்தியும், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியும் பெரும் விபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் நடந்து செல்லும் பாதசாரிகளை துரத்தி சென்று கடிக்கிறது. நள்ளிரவு நேரங்களில் தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து ஊளையிடுவதால் பொதுமக்கள் உறங்க முடியவில்லை என பலர் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் உள்ள தெரு நாய்களை உடனடியாக பிடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபாகரன், சேவூர்.

மேலும் செய்திகள்