வேலூரில் புதிய, பழைய, சித்தூர் என 3 பஸ் நிலையங்கள் உள்ளன. அதில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. வேலூர் புறநகர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மேல்மலையனூர், திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. எனவே வேலூர் புதிய பஸ் நிலையம் என்று இருப்பதை ‘மத்திய பேருந்து நிலையம்-வேலூர்’ எனப் பெயர் மாற்றம் செய்ய மாநகராட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், விருதம்பட்டு.