பாதிரிக்குப்பம் சாலையோரத்தில் உள்ள குளம் ஆகாய தாமரைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் மழைக்காலத்தில் குளத்தில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குளத்தை ஆக்கிரமித்து இருந்த ஆகாய தாமரைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.