உச்சிமேடு ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு முறையாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.