தெருநாய்கள் தொல்லை

Update: 2025-12-14 18:15 GMT

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொண்டு அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் அப்பகுதியில் நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்