மேற்கூரை அமைக்க வேண்டும்

Update: 2026-02-15 16:24 GMT

கரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற வரும் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளது. இந்நிலையில் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை வசதி இல்லாததால், வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் வாகனங்களில் பழுது ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்