வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி வாகன போக்குவரத்துக்கு முக்கியமான பகுதியாகும். அந்தப் பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகின்றன. மேலும் ஒரு சில மாடுகளால் விபத்துகளும் நடக்கின்றன. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி கிரீன் சர்க்கிள் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விவேகானந்தன், வேலூர்.