திருப்பத்தூர் டவுன் 1-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்தச் சுகாதார வளாகம் தற்போது சேதமடைந்து, சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அதை, அந்தப் பகுதி பொதுமக்கள் பயன்படுத்துவது இல்லை. இனியாவது சுகாதார வளாகத்தை சீரமைப்பார்களா?
-சிவராமன், திருப்பத்தூர்.