பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்

Update: 2025-12-14 18:03 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள புதிய சாலையில் வேலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை இருந்தது. சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். ஆனால், அந்த இடத்தில் இன்னும் பயணிகள் நிழற்குடை கட்டவில்லை. அந்த இடத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். எனவே புதிய சாலையில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

-சோமநாதன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்