வேலூர் புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்லும் வகையில் சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அதில் உள்ள தளகற்கள் உடைந்து கிடக்கிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். எனவே தள கற்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.