முறிந்து விழுந்த மரம் அகற்றப்படுமா?

Update: 2025-08-31 15:50 GMT
விழுப்புரம் வி.மருதூரில் வெங்கடகிருஷ்ணன் தெரு சித்திரா லே-அவுட்டில் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மைதானத்தில் இருந்த பெரிய மரமானது முறிந்து விழுந்தது. இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்