சிதம்பரம் கனகசபை நகர், உசுப்பூர், மகாவீர் நகர் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவைகள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க விரட்டுவதால் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.