தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-31 14:03 GMT

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள காலணி தெருவில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. அவை சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச் சென்று கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்