ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் பாப்பான்குளத்தின் கரையில் ஆழ்துளை கிணறுடன் மின்மோட்டார் அறை உள்ளது. இந்த அறை முழுவதும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்மோட்டார் அறையை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.