சென்னை அடையாறு பகுதியில் காமராஜ் அவென்யூ 1-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த இடம் மூன்று பக்கம் கொண்ட வளைவு சாலை என்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் தவறி விழுகின்றனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் துறைசார்ந்த அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சரி செய்து விட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த துறை அதிகாரிகளுக்கும் துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.