செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் தேசமுத்து மாரியம்மன் தெரு உள்ளது. இந்த தெருவில் மின்விளக்கு இல்லாததால் அந்த பகுதிகள் மது அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்கள் நடக்கியது. எனவே, பெண்கள் இந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் தெருவிளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.