விளையாட்டு அரங்கத்தால் குடியிருப்புவாசிகள் அவதி

Update: 2025-08-31 13:07 GMT

சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் தாஜ் பேலஸ் மற்றும் கனகதாரா நாராயணத்திரி என்ற 2 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் 24 மணி நேரமும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடப்படுகிறது. இரவு பகலாக செயல்படும் விளையாட்டு அரங்கில் வீரர்களின் சத்தம் மற்றும் சக்திவாய்ந்த ஒளி விளக்குகளால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, படிக்கும் மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியவர்கள் ஓய்வெடுக்க முடியாமலும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வீரர்களின் அதிகளவு சத்தத்தால் அந்த பகுதி மக்கள்களால் கதவு, ஜன்னல்களை கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இடையூறாக இருக்கும் விளையாட்டு அரங்கம் குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, மக்களின் நலன் கருதி இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்