அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா இரும்புலிகுறிச்சியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் செவிலியர் தங்கும் விடுதியின் மேலே பெரிய ஆலமரம் ஒன்று முளைத்து உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே ஆலமரத்தை அகற்றி கட்டிடத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.