திருவள்ளூர் மாவட்டம் மணலி மண்டலத்தின் மாத்தூர் பகுதியின் 106-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் எவ்வித பாதுகாப்பு அரண்களும் இன்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றி புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இங்கு விளையாடும் குழந்தைகளுக்கும், கால்நடைகளுக்கும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு அரண்களை அமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாத்தூர் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.