திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட குமணன்சாவடி பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக பொதுகழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி குமணன் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.