பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பள்ளிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணிக்காக அந்த நிழற்கூடம் அகற்றப்பட்டது. தற்போது சாலை பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே ஏ.பள்ளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-திரையன், பாப்பிரெட்டிப்பட்டி.