பொதுகழிப்பிடம் தேவை

Update: 2025-08-31 12:52 GMT

சென்னை கிண்டி கத்திபாரா பாலம் எப்போதும் பரபரப்பான இடம். இங்கு தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இந்த பாலத்திற்கு கீழே தனியார் புட் கோட் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த உணவு விடுதியில் உள்ள தனியார் கழிவறையில் சிறுநீர் கழிக்க மட்டும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கத்திப்பாரா பாலத்திற்கு கீழே ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்