மன்னார்குடி பகுதி தலையாமங்கலம் ஊராட்சியில் உள்ள மயான கொட்டகை பராமரிப்பின்றி உள்ளது. மயான கொட்டகையின் ஒரு பகுதி முழுவதும் சரிந்து அருகில் உள்ள வடிகாலுக்குள் விழுந்து விடும் நிலையில் நிற்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மயான கொட்டகை இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மயான கொட்டகையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.