கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தாலுகா அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் அரவக்குறிச்சி பகுதியில் இருந்து கரூர் மற்றும் திண்டுக்கல் பகுதிக்கு வேலை நிமித்தமாக மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மணவ, மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரவக்குறிச்சி வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்கு செல்வதில்லை. ஒரு சில பஸ்கள் தான் பஸ் நிலையம் சென்று வருகிறது. இதனால் அரவக்குறிச்சி பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கரூர் - திண்டுக்கல் மெயின் ரோட்டுக்கு நடந்து சென்று பஸ் பிடித்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அரவக்குறிச்சி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் அரவக்குறிச்சி பஸ் நிலையம் சென்று வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.