கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மலைக்கோவிலூர் அருகே தகரக்கொட்டகை பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. தகரக்கொட்டகை பகுதி பொதுமக்கள் மற்றும் நாகம்பள்ளி, பாரதி நகர், பெத்தான் கோட்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கரூர், திண்டுக்கல் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல தகரக்கொட்டகை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்துநிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே தகரக்கொட்டகை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.