கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே தாராபுரம் ரோடு, ராஜபுரம் ரோடு, கரூர் - திண்டுக்கல் ரோடு ஆகிய ரோடுகளின் சந்திப்பு பகுதி உள்ளது. இந்நிலையில் ஜீவா நகர், பொன் நகர் மற்றும் போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல அரவக்குறிச்சி பஸ் நிலையத்திற்கோ அல்லது 1 கி.மீ. தொலைவிலுள்ள கரூர் - திண்டுக்கல் ரோட்டிற்கோ சென்று தான் பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது. அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.