பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலைய பகுதியில் இந்திரா காந்தி வணிக வளாகம் உள்ளது. அதன் அருகில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாயில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதை தின்பதற்கு தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.