குரங்குகளால் அச்சம்

Update: 2025-08-31 10:03 GMT

கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் துரத்த முயலும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களை தாக்கி வருகின்றன. இதனால் அவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வனத்துறையினர் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்