ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் சாலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க வருகின்றன. இதனால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?