செஞ்சி அடுத்த மேல்களவாய் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் வரும் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?