விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் மெயின் ரோட்டில் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் இவ்வழியாக வெளியேற முடியாமல் கிராம பகுதிக்குள் புகும் அபாய நிலை உள்ளது. எனவே மழைக்காலத்திற்குள் இந்த வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.