எலச்சிபாளையம் அருகே கோ.எளையாம்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிணறு ஒன்று உள்ளது. இது தற்போது பாழடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்த கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பை கழிவுகளை போட்டு வருகிறார்கள். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் கிணற்றை எட்டிப்பார்க்கும் போது அதில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கிணற்றை மண்ணை கொட்டி மூடவும் அல்லது இரும்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கோ.எளையாம்பாளையம்.