ஆபத்தான மரம்

Update: 2025-08-24 13:39 GMT

நாமக்கல் மாவட்டம் மணியனூரில் அப்புச்சிமார் கோவில் அருகே மூன்று ரோடு பிரியும் பிரதான தார்சாலை அமைந்துள்ளது. இந்த தார்சாலை வழியாக கந்தம்பாளையத்தில் இருந்து மணியனூர் அண்ணமார் கோவில் மற்றும் மணியனூர் வாரச்சந்தை, மணியனூர் ஊருக்குள் போகும் பிரதான தார்சாலையாக உள்ளது. இந்தநிலையில் அப்புச்சிமார் கோவில் அருகே சாலையோரம் காய்ந்த பெரிய புளியமரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அந்த மரத்தின் மேலே மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் வேகமாக காற்று அடித்தால்கூட அந்த மரம் முறிந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படலாம். எனவே இந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், மணியனூர்.

மேலும் செய்திகள்