தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள், பாம்புகள் சுற்றித்திரிவதால் மாணவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை அகற்றி விட்டு புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், நாகர்கூடல்.