திருவேங்கடம் அருகே பழங்கோட்டை கிராமத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். மேலும் மயானத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.