ஓசூரில் உழவர் சந்தை சாலை மற்றும் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சாலையின் நடுவே நாள்தோறும் மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அவை நீண்ட நேரம் சாலையின் நடுவிலேயே நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சப்படுவதுடன், மிகவும் அவதியடைந்து வருகின்றனர். உழவர் சந்தையிலுள்ள கடைகளில் மாடுகள் திடீரென புகுந்து காய்கறிகளை உண்பதால் வியாபாரிகள் மட்டுமின்றி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் அச்சமடைகின்றனர். எனவே சாலைகளில் மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-விஜயேந்திரன், ஓசூர்.